புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி
புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருத்தேர் பவனி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி மங்கனூர் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்த விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.