முதல் பிரேத பரிசோதனைக்கும் 2ஆம் பிரேத பரிசோதனைக்கும் என்ன வித்தியாசம்? சிறப்பு நிபுணர் விளக்கம்

மாணவி ஸ்ரீமதி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2022-07-23 04:00 GMT

சென்னை,

மாணவி ஸ்ரீமதி இறந்தது முதல் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாக தெரிவித்து. ஆனாலும் மாணவி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இதன்காரணமாக, மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து உடற்கூராய்வு சிறப்பு நிபுணர் மருத்துவர் செல்வக்குமார் கூறியதாவது:-

இரண்டாம் உடல் பரிசோதனையில், முதல் பரிசோதனையில் உடலில் காணப்பட்ட காயங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் புதிய தழும்புகள் இருக்கிறதா என பரிசோதிக்கப்படும்.

முதல் உடல் பரிசோதனையில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதுவும் கண்டுபிடிக்கபடும். முதல் பரிசோதனை செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படும். முடிவில் ஒரு முழுமையான பரிசோதனையாக இது நடைபெறும்.

வீடியோ காட்சி பதிவு செய்யப்படுவது ஆதாரமாக பயன்படுத்தப்படுமா என்பது பற்றி அவர் கூறுகையில்,

விடியோகிராப் என்றழைக்கப்படும் வீடியோ பதிவு செய்வது அண்மையில் கொண்டு வரப்பட்ட முறையாகும்.

விசாரணையின்போது ஏதேனும் சிக்கல் எழுந்தால், இதுபோன்ற முக்கியமான வழக்குகளில், வீடியோ பதிவு செய்யப்பட்டுவது வழக்கம்.

ஏனெனில் பிற்காலத்தில் அதனை பார்த்து விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியும். அதை பார்த்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை வழங்க உதவிகரமாக இருக்கும். இதன்காரணமாக முதல் மற்றும் இரண்டாம் பரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

இது என்றும் அழிக்க முடியாத தடயமாக இருக்கும். அதில், உடலில் உள்ள அனைத்து மாற்றங்கள், உள்ளுறுப்புகள், காயங்கள், எலும்புமுறிவுகள், தழும்புகள் என அனைத்தும் பதிவாகியிருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்