சென்னை விமான நிலையத்தில் இலங்கை வியாபாரி திடீர் சாவு
சென்னை விமான நிலையத்தில் இலங்கை வியாபாரி திடீர் சாவு.;
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் கொழும்பு நகரைச் சேர்ந்த வியாபாரியான முகமது பாருக் (வயது 57) என்பவர் வந்தார். சென்னை விமான நிலையத்தில் சோதனைகளை முடித்து கொண்டு வெளியே வந்தார்.
விமான நிலைய வளாகத்தில் வந்தபோது முகமது பாருக் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான மருத்துவ குழுவினர் விரைந்து வந்து முகமது பாருக்கை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார், முகமது பாருக் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் உள்ள முகமது பாருக் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இது பற்றி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.