ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Update: 2022-10-30 18:45 GMT

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

விளையாட்டு போட்டிகள்

தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சுகாதாரத்துறை ஊழியர்கள்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குனர் பாஸ்கரன், திருவீழிமிழலை வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்