மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

வாசுதேவநல்லூர் அருகே மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரை அடுத்த சுப்பிரமணியபுரம் வியாசா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 7-வது ஆண்டு விளையாட்டு விழா, மாணவியர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது. நக்கீரன் கோபால் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய மாணவியர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கி பேசினார். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் அ.ஆனந்தன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவிகளின் அணிவகுப்பு, உடற்பயிற்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் கல்லூரி சேர்மன் வெள்ளத்துரை பாண்டியன், நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், பேராசிரியர் சுப்பையா பாண்டியன், பொதுப்பணித்துறை பொறியாளர் லிங்கராஜ், தொழில் அதிபர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவியர் பேரவை செயலாளர் ஆயிஷாமகீரா வரவேற்று பேசினார். பேரவை தலைவி கரிஷ்மிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஈஸ்வரன், தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுஜாதா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்