முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீச்சல், கூடைப்பந்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கு கபடி, கையுந்து பந்து, இறகு பந்து (ஒற்றையர், இரட்டையர்), நீச்சல், கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நீச்சல், மேசைப்பந்து போட்டிகளும், பொது பிரிவு ஆண்கள் பெண்களுக்கு மேசைபந்து போட்டிகள் நடைபெறவுள்ளது. அதேபோல் 13-ந் தேதி(திங்கள்கிழமை) பள்ளி மாணவிகளுக்கு கபடி, கையுந்து பந்து, இறகு பந்து (ஒற்றையர், இரட்டையர்), நீச்சல், கூடைப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், 14-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து போட்டிகளும், 15-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு இறகு பந்து, கால்பந்து போட்டிகளும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இறகு பந்து போட்டியும் நடைபெறவுள்ளது.
மாற்றுதிறனாளிகளுக்கு
இதைத் தொடர்ந்து 16-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் அனைத்து பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு தடகளம், இறகுபந்து, சிறப்பு கையுந்துபந்து, கபடி, எறிபந்து ஆகிய போட்டிகளும், 17-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வளைகோல்பந்து, கூடைபந்து போட்டிகளும், 21-ந் தேதி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டிகளும், 22-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொது பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு தடகள போட்டிகளும் நடைபெறுகிறது.
பின்னர் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது பிரிவு ஆண் மற்றும் பெண்களுக்கு கிரிக்கெட் (பத்து ஓவர்) போட்டிகளும், 24-ந் தேதி அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் இறகுபந்து, சதுரங்கம், தடகளம், கையுந்துபந்து, கபடி ஆகிய போட்டிகளும், 27-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவு ஆண்களுக்கு சிலம்ப போட்டிகளும், 28-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவிகள் பொது பிரிவு பெண்களுக்கு சிலம்ப போட்டிகள் நடைபெற உள்ளது.
எனவே விண்ணப்பதாரர்கள் போட்டியில் தவறாமல் கலந்து கொண்டு தேர்வுபெற்று மண்டல அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.