அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.;

Update: 2023-02-27 19:31 GMT

விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. அரசு ஊழியர்களில் ஆண்கள், பெண்களுக்கு தடகள போட்டிகளில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதலும் மற்றும் கபடி, வாலிபால், இறகுப்பந்து, செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளும் தனித்தனியாக நடந்தன. இதில் மாவட்டத்தின் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று...

மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கபடி, எறிபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிசும், மாணவிகளுக்கான வளைகோல் பந்து போட்டிகளும் நடக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்