தூத்துக்குடியில் மின்சார வாரிய பெண் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்
தூத்துக்குடியில் மின்சார வாரிய பெண் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது
தூத்துக்குடியில் மின்சார வாரிய பெண் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இன்று(சனிக்கிழமை) 2-வது நாள் போட்டி நடக்கிறது.
விளையாட்டு போட்டி
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்வாரியத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜி.குருவம்மாள் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கேரம்
தொடர்ந்து கேரம் போட்டி, சதுரங்க போட்டி, ரிங் பால், கைப்பந்து, இறகுபந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீராங்கனைகள் வருகிற 18, 19-ந் தேதிகளில் நெல்லை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து இன்றும் நடக்கிறது.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (பொது) ரெமோனா, விளையாட்டு பொறுப்பாளர் சந்தனராஜ், கமிட்டி உறுப்பினர்கள் எட்மண்ட், பேச்சிமுத்து, தமிழரசன், பரதன், கலைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.