தர்மபுரியில் சரக அளவிலான மாணவிகள் கைப்பந்து போட்டி

Update: 2023-08-24 19:00 GMT

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தர்மபுரி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தர்மபுரி சரக அளவிலான மாணவிகளுக்கான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

17 மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை தொழில் அதிபர் ரங்கா துரை, நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், ஆசிரியர்கள் ராஜா, அம்சத் பாஷா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்