ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
வேளாங்கண்ணியில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
வெளிப்பாளையம்:
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.இதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாகை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உணவகங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கெட்டுப்போன பழ வகைகள், ஜூஸ் போடுவதற்காக தயார் நிலையில்இருந்த 20 கிலோ பழங்கள், டீக்கடைகளில் வைத்திருந்த 2 கிலோ கலப்பட டீ தூள் என மொத்தம் 10 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.