கோவை: ஜூலை 10ந்தேதி முதல் ஸ்பின்னிங் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்.!
10ந்தேதி முதல் உற்பத்திய நிறுத்தப்போவதாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் ஆலைகள் அறிவித்து உள்ளது.;
கோவை,
கோவையில் வருகிற 10ந்தேதி முதல் உற்பத்திய நிறுத்தப்போவதாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் ஆலைகள் அறிவித்து உள்ளது. பஞ்சு விலை, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஒஸ்மா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெளி மாநிலங்களில் சலுகை வசதியுடன் உற்பத்தி செய்யப்படும் நூல் தமிழகத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில நூல் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தமிழகத்தில் உற்பத்தியாகும் நூலை விற்கமுடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.