நாகை காடம்பாடியில் உள்ள மகாலட்சுமி சாய்பாபா கோவிலில் விஜயதசமி மற்றும் சீரடி சாய்பாபாவின் 104-வது மகாசமாதி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.