பெருமாள் கோவில்களில் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடு
நெல்லையில் பெருமாள் கோவில்களில் ஆடி சுவாதியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.;
நெல்லையில் பெருமாள் கோவில்களில் ஆடி சுவாதியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி சுவாதி
நெல்லை பாளையங்கோட்டை அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு நேற்று மாலை மூல கருடனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் சன்னதியில் உள்ள கருடனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு கீழவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு ஈசான மூல கருடனுக்கு நேற்று மாலை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜையை ராஜாமணி பட்டாச்சாரியார் செய்தார். வழிபாட்டில் கோவில் செயல்அலுவலர் தங்கசுதா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமி தரிசனம்
அதுபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் ஆடி சுவாதி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.