ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று, போடி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.