நெல்லையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 18:44 GMT

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நெல்லையில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு தரிசனம்

2022-ம் ஆண்டு நிறைவடைந்து நேற்று 2023-வது ஆங்கில புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். நெல்லையில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நேற்று அதிகாலை முதல் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில், சந்திப்பு சாலை குமார சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நெல்லையப்பர் கோவிலில் தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்

குலதெய்வம்

இதேபோல் பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவிலில் பக்தர்கள் சாலையில் நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர். பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், மேலதிருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள், குடும்பம் குடும்பமாக சென்று வழிபட்டனர். பாளையங்கோட்டை தெற்கு முத்தாரம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர அவரவர் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்