கோவில்களில் சிறப்பு வழிபாடு
விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
ஆயதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பந்தலூர் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் கொளப்பள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. முன்னதாக கோவில் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த கொலுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். சேரம்பாடி விநாயகர்கோவில், எருமாடு சிவன்கோவில், பிதிர்காடு தஞ்சோரா முத்துமாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.