அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2023-10-06 19:22 GMT


வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்காரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த மார்க்கநாதபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், விஜயரங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில், துரைசாமிபுரத்தில் ராஜகாளியம்மன் கோவில், விஜயகரிசல்குளத்தில் துர்க்கை அம்மன் கோவில், ஏழாயிரம்பண்ணை பத்திரகாளியம்மன் கோவில், கனைஞ்சாம்பட்டியில் பாதாள துர்க்கை அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்