அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2023-08-12 18:45 GMT

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வளையல் அலங்காரம்

ஆடி கடைசி வெள்ளி்க்கிழமைையயொட்டி நாகை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. அனுச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. பால்பண்ணைச்சேரி ஜெயபத்ரகாளியம்மன், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சர்க்கரை பொங்கலில் நெய்குளம்

அதேபோல் நாகை நீலாயதாட்சி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு சர்க்கரை பொங்கலில் நெய்குளம் அமைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிளக்கு பூஜை

திருமருகல் மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

வாய்மேடு

வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சி திருக்குவளை கட்டளை காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் அருகே காக்கழனி கிராமத்தில் மழை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ெதாடர்ந்து மழை மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்