பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தளவாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,
இதேபோல் நொய்யல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.