வீரமகாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வீரமகாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது;

Update: 2022-08-28 20:38 GMT
அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் வீரமகா காளியம்மன் கோவிலில் ஆவணி மாத பூர நட்சத்திரத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள வீர மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இயற்கை சீற்றங்கள் தணிந்து உலகில் அமைதி நிலவவும், விரைவில் குடமுழுக்கு நடக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அசோக்குமார் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.







Tags:    

மேலும் செய்திகள்