தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடந்தது அதன்படி மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.