சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

ராம நவமியையொட்டி சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது;

Update: 2023-03-30 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிறப்பு யாகம் செய்யப்பட்டு பூர்ணாகுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து திரளான பெண்கள், சிறுவர் சிறுமிகள் பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சீரடி சாய்பாபா கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்