சாயாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பங்குனி மாத கார்த்திகையையொட்டி சாயாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது;

Update: 2023-03-26 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அருகே உள்ள சாயாவனத்தில் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலில் வில்லேந்திய வேலவர், தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நேற்று பங்குனி மாத கார்த்திகையையொட்டி வேலவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் துரை சிவாச்சாரியார் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்