பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-09-24 18:45 GMT

திட்டச்சேரி:

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சவுரிராஜப்பெருமாள் கோவில்

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டிநேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதல் சவுரிராஜப்பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஓரடியம்புலம்

தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்