பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2022-10-09 03:00 GMT


புரட்டாசி மாதத்தில் வரும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளாகும். இதையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை, சிறப்பு அலங்காரம். வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்