பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு சிறப்பு வரவேற்பு

வேலூர் நகருக்கு வந்த பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு சிறப்பு வரவேற்பு;

Update:2022-05-22 21:33 IST

வேலூர்

வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரதயாத்திரை தொடக்கவிழா வேலூர் தங்கக்கோவிலில் கடந்த 14-ந் தேதி நடந்தது.

இதற்கு சத்திஅம்மா தலைமை தாங்கி ரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்றது. அதன்பின்னர் ரதம் திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவில், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, பொய்கை வழியாக வேலூருக்கு  வந்தடைந்தது.

பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், ருத்ரவேள்வி, பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், திருவாசக விண்ணப்பம், ஆன்மிக சொற்பொழிவு, பாலாற்று அன்னையின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கு கலவை சச்சிதானந்தா சுவாமிகள், செங்காநத்தம் பகவதி சித்தர் சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாலை 6 மணியளவில் மேள, தாளங்கள் முழங்க பாலாறு அன்னை ரதயாத்திரை ஊர்வலம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு வேலூர் மண்டித்தெரு, மெயின்பஜார், பில்டர்பெட்சாலை, அண்ணாசாலை வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது.

இதில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்