பட்டுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை போல் பட்டுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-09-24 20:21 GMT

பட்டுக்கோட்டை:

தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை போல் பட்டுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என

ரெயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கோரிக்கை மனு

பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி வருகிறது. ராமநாதபுரம், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதியில் இருந்து சென்னையில் வசித்து வரும் பொது மக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வருவார்கள்.

சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

சொந்த ஊருக்கு வரும் இவர்கள், சென்னைக்கு திரும்பும் வகையில் கடந்த ஆண்டு சிறப்பு ரெயில் (சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம்) இயக்கப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்