பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வேளாங்கண்ணி செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வேளாங்கண்ணி செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி(வண்டி எண்: 07357) இடையே காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி(சனிக்கிழமை) வாஸ்கோடகாமாவிலிருந்து இயக்கப்படும்.
வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா(07358) இடையே இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி(ஞாயிற்றுகிழமை) வாஸ்கோடகாமாவிலிருந்து இயக்கப்படும்.
வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி(வண்டி எண்: 07359) இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வாஸ்கோடகாமாவிலிருந்து இயக்கப்படும்.
வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா(07360) இடையே காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் செப்டம்பர் 4-ந்தேதி(ஞாயிற்றுகிழமை) வேளாங்கண்ணியிலிருந்து இயக்கப்படும்.
தாம்பரம்-வேளாங்கண்ணி(06031) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் செப்டம்பர் 7-ந்தேதி(புதன்கிழமை) தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.
வேளாங்கண்ணி-பன்வெல்(06032) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் செப்டம்பர் 8-ந்தேதி(வியாழக்கிழமை) வேளாங்கண்ணியிலிருந்து இயக்கப்படும்.
மங்களூர்-தாம்பரம்(06050) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் செப்டம்பர் 11-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) மங்களூரிலிருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.