ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.;
சூரமங்கலம்:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம்- சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06046) அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதியும், மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரல்- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (06045) வருகிற 2-ந் தேதியும், மேலும் தாம்பரம் -மங்களூர் சிறப்பு ரெயியில் (06041) வருகிற 2-ந் தேதியும், மங்களூர்- தாம்பரம் சிறப்பு ரெயில் (06042) வருகிற 3-ந் தேதியும், தாம்பரம் -கொச்சுவேலி சிறப்பு ரெயில் (06043) வருகிற 4-ந் தேதியும், கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் (06044) வருகிற 5-ந் தேதியும் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில் -சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06048) அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.