மதுரை - முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரை - முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-08-15 10:15 GMT

சென்னை,

பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு வருகிற 18-ந் தேதி ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06114) மதுரையில் இருந்து அன்றைய தினம் இரவு 7 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையமும், 11.30 மணிக்கு கோவை ரெயில் நிலையமும் சென்றடைகிறது. மறுநாள் காலை 6.45 மணிக்கு பெரம்பூர் ரெயில் நிலையம் சென்றடையும். 20-ந் தேதி நள்ளிரவு 2.45 மணிக்கு முசாபர்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரெயில் கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சூளூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, சித்தரஞ்சன், மதுபூர், ஜசித், ஜாஜா, கியூல், சமஸ்திபூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயிலில், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 8 பொதுப்பெட்டிகளும், 2 பார்சல் பெட்டிகளுடன் கூடிய பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்