வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.;
தா.பழூர்:
தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உற்சவ மூர்த்திகளான வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி தாயார் மகாலட்சுமி கோலத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். மகாலட்சுமி சகஸ்ரநாமம் உள்ளிட்ட பல்வேறு வேத மந்திரங்கள் முழங்க மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் புடை சூழ பிரகார உற்சவம் நடைபெற்றது. பெருந்தேவி தாயாருக்கு பல்வேறு உபச்சாரங்களுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.