பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழுக்கள் திடீர் ஆய்வு

பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழுக்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2022-10-12 19:19 GMT

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசின் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் 4 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள்.இந்த குழுவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குனர் அளவில் உள்ள அதிகாரிகளும், தனி தாசில்தார்களும், காவல்துறையினரும் இடம் பெற்றுள்ளனர்.தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழு அளவில் மேற்கொள்ளப்படும் நிலையில் பாதுகாப்பு விதி முறைகள் சரியான முறையில் ஆலை நிர்வாகத்தினரால் கடைபிடிக்கப்படுகிறதா? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? விபத்து இல்லாமல் உற்பத்தி செய்ய உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? தொழிற்சாலைகளின் விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என அந்த குழுவினர் திடீரென ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வு குறித்த அறிக்கைகள் சென்னையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்