கூடலூரில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
கூடலூரில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்;
கூடலூர்
ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் அன்றைய தினங்களில் அம்மன் கோவில்களில் வழிபாடு செய்தல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆடி அமாவாசையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் மற்றும் மகாவிஷ்ணு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கூடலூர் பகுதியில் உள்ள புத்தூர் வயல் மகாவிஷ்ணு கோவிலில் ஏராளமானவர்கள் வழிபட்டனர். இதேபோல் பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் தர்ப்பணம் செய்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.