சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆனி திருமஞ்சனத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவிலில் நடராஜருக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்பட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.