நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை
நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
ஆவணி மாத சதுர்த்தசி திதியையொட்டி அரியலூர் மாவட்டம் ஆலந்துறையில் உள்ள நடராஜ பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடராஜபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர். இதேபோன்று கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.