ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலை காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ள காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை, சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, வாஸ்து பூஜை, யாக சாலை பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆலங்குளம், கொங்கன்குளம், அம்பேத்கர் காலனி, சிமெண்டு ஆலை காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.