காலபைரவருக்கு சிறப்பு பூஜை

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-08-19 20:00 GMT

கொண்டலாம்பட்டி:-

கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு நேற்று அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கரபுரநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் உத்தமசோழபுரம், பூலாவரி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, பெரிய புத்தூர், தம்மநாயக்கன்பட்டி, வீரபாண்டி, சிவதாபுரம், வேடுகாத்தான்பட்டி உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல எடப்பாடி நஞ்சண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்