கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2023-06-12 00:56 IST

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலாக விளங்கும் போஜீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வடை மாலை சாத்தப்பட்டு கால பைரவருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போஜீஸ்வரர் மற்றும் ஆனந்தவல்லி தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை பயபக்தியுடன் வணங்கினர். இதேபோல் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்