பக்தர்களின் நலனை வேண்டி சிறப்பு பூஜை
பழனியில் பக்தர்களின் நலனை வேண்டி மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பழனி கிரிவீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மேற்கு கிரிவீதி மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கலசபூஜை, புண்ணியாகவாஜனம், பாராயணம், கணபதி யாகம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.