தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-09-25 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தீர்த்தமலையில், திருப்படி திருவிழா நடந்தது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோவில் அடிவாரத்தில் இருந்து, தேவார பாடல்கள் பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்று படிப்பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்