கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் கொண்டாடினர்.

Update: 2022-12-31 21:08 GMT

நாகர்கோவில், 

புத்தாண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் கொண்டாடினர்.

புத்தாண்டு பிறப்பு

2023 புத்தாண்டு பிறப்பு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. திருப்பலி முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல் நாகர்கோவில் கற்கோவில், ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், பிலிப்ஸ்புரம் ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

இதுேபால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொண்டாட்டம்

புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சாலை, தெருக்கள் மற்றும் வீதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக மேட்டார் சைக்கிளில் வலம் வந்தபடி சாலையில் செல்பவர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்கு முன்பு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். நண்பர்கள், உறவினர்களுக்கு கேக் வழங்கி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகள் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்த நிலையில் இருந்தது. இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் புத்தாண்டு ெகாண்டாட்டம் களை கட்டியது. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்