முப்பெரும் தேவியர் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.;
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அருள் வாக்கு மற்றும் மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.