ஆஞ்சநேயருக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு
ஆஞ்சநேயருக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் முன்பு தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயருக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதேபோல் நாககுடையான் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் சன்னதி, கோவில்பத்து என்னையாளும் கண்ணபிரான் கோவில் ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில் ஆஞ்சநேயர் சன்னதிகளில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அமாவாசையையொட்டி வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில் மகாமண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில் மகாமண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.