வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தையொட்டி வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;
தைப்பூச விழா
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தை பூசத்தையொட்டி அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ச்சியாக தேரடியில் உள்ள வரசித்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு தங்க கவசத்திலும், மலை குன்றின் மேல் குடியிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் மற்றும் கீழ் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு வெள்ளி கவசம் அண்வித்து அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
நீண்ட வரிசை
மாலை 5 மணி அளவில் சிறப்பு திரவியம் மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. அஅதைத்தொடர்ந்து உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால் அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சவுமியா குழுவினரின் சிறப்பு பரதநாட்டியம், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தைப்பூசம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பங்களுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று அரோகரா கோஷமிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்தனர்.