சிங்காரவேலவர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
சிங்காரவேலவர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று வைகாசி மாத கிருத்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கிருத்திகை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.