கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
புனர்பூச நாளையொட்டி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத புனர்பூச நாளையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக பூஜையும், பின்னர் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.