காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காளியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.