திருக்குறுங்குடி நம்பி கோவிலில் சிறப்பு பூஜை- அன்னதானம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திருக்குறுங்குடி நம்பி கோவிலில் சிறப்பு பூஜை- அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
இட்டமொழி:
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திருக்குறுங்குடி நம்பி கோவிலில் சிறப்பு பூஜை- அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
பிறந்தநாள் விழா
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் நேற்று ராகுல் காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள உதவும் கரங்கள் வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் சீருடைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
பின்னர் 2024-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக வேண்டி திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராகுல்காந்தி பெயருக்கு அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். திருக்குறுங்குடி ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். ஏர்வாடியில் பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு
களக்காட்டில் உள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நாங்குநேரி ஓசானம் அன்பு இல்லம் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் மதிய உணவு வழங்கினார். விழாவில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் த.காமராஜ், மாநிலச் செயலாளர் ஜோதி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லப்பாண்டி, சந்திரசேகர், ராஜகோபால், பொதுச்செயலாளர்கள் இட்டமொழி நம்பித்துரை, கக்கன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத், வட்டார தலைவர்கள் வாகைதுரை, அலெக்ஸ், காளபெருமாள், ராமஜெயம், கனகராஜ், சங்கரபாண்டியன், நளன், ரவீந்திரன், நகரத்தலைவர்கள் ரீமா பைசல், ஜார்ஜ் வில்சன், மகளிரணி நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் தனிதங்கம், ஒன்றிய கவுன்சிலர் வனிதா காமராஜ், மாநில பொதுச்செயலாளர் குளோரிந்தாள், இணைச்செயலாளர் கமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.