நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிறன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஐப்பசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.