புரட்டாசி 2-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-30 19:30 GMT

கிருஷ்ணகிரி,:

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

2-வது சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் புரட்டாசி மாதம் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த கனவாய்ப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், வேலம்பட்டி பெரியமலை கோவில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

இதேபோல் பர்கூர் அருகே ஐகுந்தம் கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கனவாய்ப்பட்டி பெருமாள் கோவிலில் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் மொட்டை போட்டு தங்களின் நேர்த்திக்கடன்

Tags:    

மேலும் செய்திகள்